புது கெட்டப்புக்கு மாறிய வைஷ்ணவி! ஷாக் ஆன ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான வைஷ்ணவி, ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத கெட்டப்புக்கு மாறி ஷாக் ஆக்கி உள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. 

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபின், அவ்வப்போது காதலனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிடுவது, பிக்கி உடை புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவது என இருந்த இவர் தற்போது, அவருடைய கெட்டப்பை மாற்றி அந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில், வைஷ்ணவி ஓவியாவை போல் ஹேர் கட் செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலர் இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான, மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா போன்றோருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனால் வைஷ்ணவி எப்போதாவது சில புகைப்படங்களை மட்டுமே ஷார் செய்து விட்டு இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.