பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த நிகழ்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

காரணம் பிக்பாஸ் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மீது ரசிகர்களுக்கு சற்று சுவாரஸ்யம் குறைந்தே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த இரண்டாவது சீசனில் அதிகபடியான சண்டை சச்சரவுகள் இல்லாமல் உள்ளது. 

நேற்றைய தினம் அனைத்து போட்டியாளர்களுக்கும், நீளம், மஞ்சள், ரோஸ் உள்ளிட்ட சில பேட்ச்கள் கொடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. 

தலையில் முட்டை உடைப்பது, தண்ணீரில் தள்ளி விடுவது, குழந்தை போல் நடந்துக்கொள்வது, ரவுடி போல் நடந்துக்கொள்வது, வெங்காயம் உரிப்பது என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சில டாஸ்க் கொடுத்தார், போட்டியாளர்கள் இந்த டாஸ்க் முடியும் வரை அதே கதாபாத்திரத்தில் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தான் விதிமுறை. 

ஆனால், ரம்யா, பாலாஜி, வைஷ்ணவி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க்கை சரியாக செய்து முடிக்காததால், பிக் பாஸ் கொடுத்த 1000 பாயிட்ஸில் இருந்து 400 பாயிட்ஸ் குறைந்தது. 

பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 போட்டியாளர்களில் 12 பேர் அவரவர் டாஸ்கை சரியாக செய்த போதிலும் இந்த நான்கு பேரால் அனைவர்க்கும் பாயிட்ஸ் இழப்பு ஏற்பட்டது. எனினும் அனைவரும் பரவாயில்லை என கூறி இதை பெரிதாகஎடுத்துக்கொள்ளாதது அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை காட்டுகிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.