big boss starts his game as usual

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றிலிருந்து சின்னத்திரையில் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. கமலஹாசன் துவக்கி வைத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், பல முன்னாள் பிரபலங்களும், இன்னாள் பிரபலங்களும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இம்முறை கலந்து கொண்டிருப்பவர்களில் யார் ஜூலி?, யார் ஓவியா? என ஒரு பக்கம் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டினுள் நுழையும் போது எல்லோரும் சாதாரணமாக தான் இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் கொடுக்கும் ஒவ்வொரு டாஸ்க்கும் தான், அவர்களை ஜூலியாக, ஓவியாவாக, மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அந்த வகையில் தற்போது பிக் பாஸின் லேட்டஸ்ட் பிரமோ வெளியாகி இருக்கிறது. இதில் பிக் பாஸ் ஒரு புதிய டாஸ்கை கொடுத்திருக்கிறார். அந்த டாஸ்க்கின் படி வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும், மூன்று என்வலப்புகளை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதில் செண்ட்ராயன் பெண்கள் அறையில் என்வலப்பை தேடியபோது, மும்தாஜ் அவரிடம் பெண்களின் துணிகளை தொடாதீர்கள்...! என கோபமாக கூறுகிறார்.

செண்ட்ராயனும் சக போட்டியாளர்களிடம், ” பிறகு எப்படி பொருளை தேட” என கேட்கிறார். இந்த சர்ச்சையால் கடுப்பான மும்தாஜ், பிக் பாஸிடம் புலம்புகிறார். இப்படி பிரச்சனையுடன் ஆரம்பித்திருக்கிறது இந்த லேட்டஸ்ட் பிரமோ. இவ்வாறாக பிக் பாஸ் தன்னுடைய நாரதர் வேலையை இனிதே தொடங்கி விட்டார். இந்த பிக்பாஸ் நாரதரின் கலகம் தான் எங்கு முடியப்போகிறதோ? தெரியவில்லை...!