பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களாலும் செல்லமாக கருப்பு அண்ணன் என்று அழைக்கப்பட்டவர் கஞ்சா கருப்பு.

இவர், சும்மா இருக்கும் பரணியை வேண்டுமென்றே சீண்டி சிலிண்டரை தூக்கி அடிக்க போனதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அதே போல, பரணியை பற்றி அனைவரிடமும் குறை கூறி கொண்டு தவறாக சொன்னதன் விளைவு அனைவரும் பரணியை ஒட்டுமொத்தமாக ஒதுக்கினர். போட்டியாளர்கள் கொடுமை தாங்க முடியாமல் ஒரு நிலையில் சுவர் ஏறி குதித்து வெளியேற முயன்றார் என்பது அனைவரும் அறிந்ததுதான். 

தற்போது எலிமினேஷன் செய்யப்பட்டு பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட கஞ்சா கருப்பு பிரபல எஃப்எம் ரேடியோவில் பேட்டி அளித்த போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்கிரிப்ட்தான்  எல்லாம் அவங்க கரக்ட்டாதான் கொடுப்பாங்க.. நடிப்பதில் கொஞ்சம் வீக்னஸ் இருக்கும் எனக் கூறிள்ளார்.

அதில் காட்டும் எல்லாமே நிஜம் என மக்களை நம்ப வைத்து வரும் நிலையில் அதில் கலந்து கொண்டவர் இவ்வாறு பேட்டி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.