விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது.  100 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகை சாக்ஷி அகர்வால்,  சேரன், பாத்திமா பாபு, சரவணன், நடிகை ஷெரின், நடன இயக்குநர்  சாண்டி, இசைக்கலைஞர் மோகன் வைத்யா  உள்ளிட்ட 15 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் இதற்கான அறிமுக நிகழ்ச்சியில்  பேசிய நடிகர் கமல் ஹாசன், வழக்கம் போல் தன்னுடைய  பிக் பாஸ் மேடையை பிரசார மேடையாக மாற்றினார். ஏற்கனவே கலந்து கொண்ட இரண்டு சீசன்களிலும் , பிக் பாஸை  அரசியல் லாபத்திற்கான பயன்படுத்தி கொண்ட கமல் இந்த முறையும் அதை மறக்காமல் ஆரம்பித்துள்ளார்.  உதாரணமாக இலங்கை பெண் செய்தி வாசிப்பாளராக வந்துள்ள லாஸ்லியா எங்களுக்காக தெனாலி படத்தில்  பேசியது போல இலங்கை தமிழில் பேசுங்கள் என்று கூற அதிலும் சாமர்த்தியமாக அரசியலைப் புகுத்தினார் கமல்.அப்போது பேசிய அவர், 'நல்ல நாட்டை பார்த்தால் கோபம். ஏனென்றால்  நம் நாடு இப்படி இல்லையே என்ற கோபம். எனது நாட்டை பார்த்தாலும் கோபம். ஏனென்றால் எனது நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே எனக் கோபம். ஷவரில் குளிப்பவர்களைப் பார்த்தாலும் கோபம். சாக்கடையில் தண்ணீரை கலப்பதைப் பார்த்தாலும் கோபம். நாட்டை மாற்ற வேண்டுமென்றுமானால் கோபம் வேண்டும். ஆனால் அந்த மாற்றம் மையப்புள்ளியிலிருந்துதான் தோன்றும். அதனால் தான் நான் பாரதி சொன்னதுபோல ரெளத்திரம் பழகிக்கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

கமலின் அந்தப் பேச்சு நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும் முதல் நாளே தன்னோட அரசியல் பிரச்சாரத்தை ஆரம்பிச்சிட்டாரேப்பா’ என்ற அங்கலாய்ப்புகளையும் வலைதள கமெண்டுகளில் காணமுடிகிறது. இந்த நிகழ்ச்சியின் விருந்தினர்களில் ஆகப்பெரிய ஆச்சரியமாக அமைந்திருப்பது சேரனின் வரவு மட்டுமே.

“சார்.. உங்க தேவர்மகன் வெளியாகும் போது என் படமான ‘பொண்டாட்டி ராஜ்ஜியமும் வந்தது. நூறு நாள் போச்சு சார்’ என்று சரவணன் சிறுபெருமிதத்துடன் மேடையில் கமலிடம் சொல்லத்துவங்க அதைக் கண்டுகொள்ளாமல் நோஸ்கட் பண்ணினார் கமல்.

பிக்பாஸில் சமகால ஷெரீன் புஷ்டியாக தோன்றியதைப் பற்றி அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் துக்கமாகவும் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவரும் அன்பர்கள் ஷெரினின் லேட்டஸ்ட் தோற்றத்தை அவரது பெயரில் ஆர்மி ஆரம்பிக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டார்களாம். டெல்லி கணேஷிடம் ஒரு படத்தில் வடிவேலு,’கல்யாணமான புதுசுல இருந்துச்சே அந்த பழைய ஃப்ரெஷான அக்காவைத் திருப்பிக்குடு’ என்று கேட்பாரே அந்தக் காட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது.