பிக்பாஸ் முதல் சீசன்... ஆரம்பத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், இறுதியில் பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நிகழ்ச்சியாக இருந்தது.

இதை தொடர்ந்து, கடந்த மூன்று மாதத்திற்கு முன், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் வாரம் ஒரு போட்டியாளர் என இரண்டாவது வாரத்தில் இருந்து தொடர்ந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

முதல் சீசன் போல் இரண்டாவது சீசனுக்கு பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், வெற்றியாளர் யார் என்பதை தெறித்து கொள்ள அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவியது.

அதன் படி பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளராக, முதல் நாள் முதல் 100 நாட்கள் வரை நிலையான மனநிலையோடு விளையாடிய நடிகை ரித்விகா தேர்வு செய்யப்பட்டதாக கமல் அறிவித்தார். வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ரித்விகா மேடையிலேயே ஆனந்த கண்ணீர் விட்டார். பின் தனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றி தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சி நிறைவு பெரும் போது ரசிகர்கள் சிலர் கமலுடன் ஒரு சில கேள்விகளை எழுப்பினர். அப்போது... ஒருவர், பிக்பாஸ் மூன்றாவது சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா என கேள்வி எழுப்பினார். இதற்க்கு கமல் "பண்ணனுமா வேண்டாமா?" என ரசிகர்களை பார்த்து கேள்வி கேட்டார். அதற்கு  ரசிகை ஒருவர், "பண்ணனும்" என கூற, உடனே கமல் "பண்ணிட்டா போச்சு" என கூறினார்.

இதனால் அடுத்த சீசனிலும் கமல் தொடரவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.