தமிழ் பிக்பாஸ் சீசனில் ஓவியா - ஆரவ், யாஷிகா - மகத், கவின் - லாஸ்லியா என காதலர்களைப் போல் ஜோடி ஜோடியாக காண்பித்தாலும் அவர்கள் லவ் கூட கன்பார்ம் ஆவதில்லை. கடந்த பிக்பாஸ் 3 சீசனில் உருகி உருகி காதலித்த கவினும், லாஸ்லியாவும் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார் என்றே யாருக்கும் பிடிபடவில்லை. அப்படியிருக்க மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்போது பொறுப்பான பெற்றோராக புரோமோஷன் அடைந்துள்ளனர். 

மலையாளம் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த்  இருவரும் அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இதையும் படிங்க: ட்விட்டரில் இணைந்தாரா விஜய் மகள்?.... நன்றி சொல்லி சாந்தனு போட்ட ட்வீட்டால் வெளியான குட்டு...!

இந்நிலையில் தற்போது பியர்ல் தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து அறிவித்துள்ளார். அதில், இரண்டு வருடங்களுக்கு பிறகு காதலை பகிர்ந்து கொண்டோம் என்றும் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் காதல் தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.