big boss program special care to actress bindu
நடிகை பிந்து மாதவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் கலந்துக்கொண்டவர். இவர் பாதியில் கலந்து கொண்டதால் என்னவோ இவரை மற்றும் மிகவும் ஸ்பெஷலாக நடத்துகின்றனர் பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.
ஆரம்பத்தில் இருந்து ஓவியாவுக்கு சப்போர்ட் செய்ததால் இவருக்கும் மக்கள் நல்ல விதத்தில் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதே போல் இவரும் ஓவியனாக மாற நடனம் மூலம் முயற்சிகள் செய்ததில் அது எந்த அளவிற்கு கைகொடுக்கிறது என்பது சந்தேகம் தான்.
கடந்த வாரம், பட்ஜெட் லக்சுரி டாஸ்க்கிற்காக பைத்தியம் போல் நடிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த டாஸ்கில் பிந்துவிற்கு நர்ஸ் வேடம் கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த வாரத்தில் வைக்கப்பட்டுள்ள டாஸ்கில், பிந்துவிற்கு குவாலிட்டி செக்கிங் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற போட்டியாளர்கள் முதுகு வலிக்க துணிகள் துவைத்து கஷ்டப்படும் நிலையில் பிந்துவிற்கு மட்டும் இப்படி சொகுசாக கால் மேல் கால் போட்டு வேலை செய்யவைத்துள்ளது பிக் பாஸ்... ஏன் இவருக்கு மட்டும் இப்படி ஒரு சலுகை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
