big boss participants made family
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவரை பற்றி மற்றொருவர் குறை கூறி கொண்டிருந்த நிலையில் தற்போது அனைவரும் ஒரு குடும்ப உறவுகளாக மாறியுள்ளனர்.
இதில் குடும்பத்தில் மூத்த அண்ணனாக இருப்பவர் நடிகர் வையாபுரி, இவர் இந்த குடும்பத்தின் மூத்த மகனாக கணேஷ் வெங்கட்ராமையும், மருமகளாக நமிதாவையும் தேர்வு செய்தார். இதே போல இரண்டாவது மகனாக சக்தியையும் மருமகளாக காயத்ரியையும் தேர்வு செய்தவர், இந்த குடும்பத்தின் கடைக்குட்டி மகனாக ஆரவையும், தங்கையாக ஜூலியையும் தேர்வு செய்து ஜூலியின் காதல் கனவில் தீயை வைத்து விட்டார்.
மேலும் ஓவியா ஜூலியின் தங்கையாகவும், ரைசா விருந்தாளியாகவும் தேர்வு செய்து கவிஞர் சினேகனை வேலைக்காரனாக மாற்றிவிட்டார். இதில் முக்கியமானது என்னவென்றால் அனைத்து வேலைகளையும் வேலைக்காரனாக உள்ள சினேகன் தான் செய்யவேண்டும் என்பது.
இப்படி நடந்துள்ளதால் இனி வரும் நாட்களில் பெரிய பிரச்சனைகள் வரவும் வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
