அவருக்கு ஜோடியாக மதுமிதா நடித்திருந்தார். முதல்முறையாக சந்தானம் - மதுமிதா காம்போவில் வெளிவந்த ஓகேஓக படத்தில், இவ்விருவரின் காமெடி காட்சிகளுக்கும் தியேட்டரே சிரித்து வெடித்தது எனலாம். குறிப்பாக, மதுமிதாவிடம் சந்தானம் கூறும் "அடை.. தேனடை..." என்ற வசனம் ரசிகர்களிடையே இன்றளவும் ஃபேமஸாக உள்ளது. 

அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த சந்தானம் - மதுமிதா காம்போ, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. டகால்ட்டி, இயக்குர்ஆர்.கண்ணனின் புதிய படம் ஆகிய படங்களை முடித்துக் கொடுத்த சந்தானம், தற்போது அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் 'டிக்கிலோனா' படத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்தின் ஷுட்டிங், அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் சினிஷ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயருமான ஹர்பஜன் சிங் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 

கிரிக்கெட்டிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹர்பஜன் சிங் அடியெடுத்து வைக்கும் முதல் படம் இது.முதல்முறையாக சந்தானம் 3 வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், அனகா, ஷிரின், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

அவர்களுடன் தற்போது, பிக்பாஸ் புகழ் மதுமிதாவும் இணைந்துள்ளார். இந்த முறை ஹீரோ சந்தானத்துடன் இணைந்திருப்பதுதான் ஹைலைட். 
'டிக்கிலோனா' படப்பிடிப்பின்போது சந்தானத்துடன் மதுமிதா இருக்கும் புதிய படங்கள், தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

அத்துடன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மதுமிதா நடிக்கும் படம் என்பதால், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மீண்டும் கம்பேக் கொடுக்கும் சந்தானம் - மதுமிதா காம்போ, ஓகேகே மேஜிக்கை டிக்கிலோனாவிலும் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.