கமலின் கணக்குப் படி பிக் பாஸ் நிகழ்ச்சியை சுமார் 3கோடி பேர் பார்த்துக்கொண்டிருக்க, அதில் மூன்றில் ஒரு பங்கினருக்காவது லேசான மாரடைப்பு வரும் வகையில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திருமணம் நடந்து விட்டதாகவும் அதை அவர் சாமர்த்தியமாக மறைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 10 நாட்கள் ஆன நிலையில், அதிக தமிழக ஜனங்களின்  நெஞ்சத்தைக் கிள்ளியிருப்பவர் லாஸ்லியா. மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவைப் போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மிகள் துவக்கப்பட்டுள்ளன.  தினமும் இவர் நடனமாடுவதை பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். 

 இந்த நிலையில் இவர் மீது தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இவரின் ரசிகர் ஒருவர் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில், 'லாஸ்லியாவின் உண்மையான முகத்தை காண காத்திருக்கிறேன்' என்று கூறினார். அதை பார்த்த மற்றொருவர், 'எங்கள் பள்ளியில் அவர் தான் மிகவும் ஆபத்தானவர்' என்று பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ஆர்மி ரசிகர்கள், 'உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டதற்கு, நானும் அவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அவருக்கு விவாகரத்து கூட ஆகிவிட்டது. ஆனால், அவரது உண்மை முகம் தெரியாமல் அவருக்கு ஆர்மியெல்லாம் ஆரம்பித்துள்ளனர்' என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.இச்செய்திகளால் அத்தனை ஆர்மிகளும் ஆடிப்போயுள்ளன. சிலருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்.