பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு போக உதவியது கவின், லாஸ்லியா காதல். சாக்‌ஷியுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த கவினை வம்படியாக தம் பக்கம் இழுத்தார் லாஸ்லியா. இதனால் ஒரு கட்டத்தில் சாக்‌ஷியை கழட்டிவிட்ட கவின், லாஸ்லியாவை காதலிக்க ஆரம்பித்தார். நீ இல்லாமல் நானில்லை என்ற அளவுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருவரும் உருகி, உருகி காதலித்தனர். வெளியே போனாலும் இந்த காதல் தொடரும் என சபதம் எடுத்தனர். இதனால் கவின், லாஸ்லியா ஆர்மி செம்ம ஹாப்பியானது. 

காதலில் டுவிஸ்ட் இல்லைன்னா எப்படி, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியா பெற்றோர் பகிரங்கமாக காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலை முறித்துக்கொள்ள இருவரும் முடிவெடுத்தனர். ஆனாலும் காதல் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருந்தது. கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போது கூட, தன்னையும் வெளியே அனுப்பிவிடும் படி மன்றாடினார் லாஸ்லியா. இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இருவரும் ஒருவரை, ஒருவர் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும் இருவரும் தங்களது காதலை முறித்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கவின், லாஸ்லியா காதலை முறித்துக் கொண்டாலும் அவர்களது ரசிகர்களும், நெட்டிசன்களும் விடமாட்டார்கள் போல.  இருவரும் தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிடும் புகைப்படங்களை ஒன்றாக இணைத்து, அதன் மூலம் கவின், லாஸ்லியா ஏதோ செய்தி பரிமாறிக்கொள்வது போல் காட்டியுள்ளனர். மேலும் கவின், லாஸ்லியா காதல் குறித்து அறிய தீயாய் அலையும் ஆர்மி ரசிகர்கள் அப்டேட் கேட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர். 

தற்போது கவின், லாஸ்லியா இருவரது சின்ன வயது போட்டோவையும் ஒன்றாக இணைத்து, யார் அழகான குழந்தை என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். அந்தப் புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

இதேபோல பிக்பாஸ் முதல் சீசனில் காவியம் படைத்தது நம்ம ஓவியா, ஆரவ் காதல். விலகி, விலகி ஓடுனா ஆரவ்வை விரட்டி, விரட்டி காதலித்த ஓவியா தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அதனால கவின்- லாஸ்லியா ஒன்றாக இருக்கிற போட்டோவையும், ஓவியா - ஆரவ் ஒன்றாக இருக்கிற போட்டோவையும் ஒன்றாக இணைத்து. யார் சூப்பர் ஜோடி என்ற போட்டியை நெட்டிசன்கள் நடத்தி வருகின்றனர். காதலை கைவிட்டுவிடலாம் என கவின், லாஸ்லியா முடிவு செய்தாலும், அவங்க ஆர்மி விடாது போல தெரியுது.