Big Boss Kamal 14 Celebs 30 Cameras 100 Days and 1 House

தமிழ்நாட்டின் மிக பிரபலமான பொழுதுபோக்கு சேனல் விஜய் தொலைக்காட்சி. இப்பொழுது புதிய நிகழ்ச்சிகளை வழங்கிவரும் இந்த தொலைக்காட்சி. தற்போது பொழுதுபோக்கில் உச்சகட்டமாக தென்னிந்தியாவின் மிகபெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடங்கவுள்ளது. அதுவே பிக் பாஸ்.

திரையில் மின்னிய, உலகநாயகன் கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அடியெடுத்து வைக்கிறார்.

சமீபத்தில் இவரை நடத்தவுள்ள பிக் பாஸ் டீசர் வெளியானது. இது மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பிரபலங்கள் பலர் தங்களது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும், நடிகர்கள் சூரிய, உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பகிர்ந்துள்ளனர்.

மேலும் அந்த டீஸருக்குப்பின், அனைவரும் இதன் ப்ரோமோவை காண ஆவலோடு உள்ளனர். அந்த பிரமாண்ட ப்ரோமோவில் கமல் ஹாசன் கூறுகையில் சினிமாவில் தான் நிறைய வேடங்களை அணிந்துள்ளேன். ஒரு நாயகனாக, வில்லனாக, குள்ளனாக போலீசாக, இந்தியனாக, அமெரிக்கனாக, காதலனாக இப்படி பல வேடங்களை ஏற்று நடித்துள்ளேன். ஆனால் தன்னைவிட பல வேடங்கள் போட்ட நடிகன் ஒருவன் உள்ளன என்கின்றார்.

ஒவ்வொரு சராசரி மனிதனுக்குள்ளும் ஒரு நடிகன் உள்ளான். தினசரி வாழ்க்கையில் நம் ஒவ்வொரு முகத்தையும் அணிந்து கொள்கிறோம். நண்பர்களிடம் ஒரு முகம், பெற்றோர்களிடம் ஒரு முகம் வேலை பார்க்கும் இடத்தில ஒரு முகம், சமூக வலைதளத்தில் ஒரு முகம், தனிமையில் ஒருமுகம் என இடத்திற்கும் ஆட்களுக்கும் ஏற்ப நடித்துக்கொண்டிருக்கிறோம். 14 பிரபலங்கள் 30 கேமராக்களை மத்தியில் வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் 100 நாட்கள் ஒரே வீட்டில் இதுவே பிக் பாஸ்.

உலகளவில் பிரபலமான ஸ்மார்ட் போன் நிறுவனமான விவோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஸ்பான்சராக இணைந்துள்ளனர்.

இதன் CEO விவேக் ஜாங் கூறுகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்ததில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கு அவர்களிடம் எங்கள் உறவை வலுப்படுத்தவும் எங்களுக்கு கிடைத்த ஒரு வலுவான மேடை தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் போது அவர்களின் உற்சாக தருணங்களை விவேக்குடன் நடிகர் கமல் ஹாசனுடனும் பதிவு செய்யலாம்.