big boss is fully scripted
நடிகர் கமலஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டில் நமீதா, ஓவியா, அனுயா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி, சினேகன், உள்ளிட்ட 15 பேர் தங்கியுள்ளனர்.
பொதுவாக நாடு முழுவதும் சீரியல் நிகழ்ச்சி அனைவராலும் விருப்பி பார்க்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதுவும் தமிழகத்தில் சொல்லவே தேவையில்லை.
சீரியல் பார்க்காத பெண்களையும் சோறு போடு என்று கெஞ்சாத ஆண்களையும் கைவிட்டு எண்ணி விடலாம். இதற்கு காரணம் நம் வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் வடிவமைக்கப்பட்டு அதை அப்படியே தொகுப்பதுதான்.

இதே மூலக்கருவை மையமாக கொண்டது தான் பிக்பாஸ். மக்களில் பெரும்பாலானோர் இந்த நிகழ்ச்சி ரியலாக நடக்கிறது என ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு கருத்துக்கள் ஏராளமாக பரவி வருகின்றன.
ஆங்கில டிவியில் தொடங்கி ஹிந்தியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்ப பட்டு வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது தமிழ்நாட்டுல் ஆரம்பமாகியுள்ளது. 100 நாட்கள் சூட்டிங் என்று சொன்னாலும் பத்தே நாளில் முடிக்கப்பட்டு விடும்.
பின்பு அதை அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் என்ற நேரக்கணக்கில் 100 நாட்களுக்குஒளிபரப்புவார்களாம்.
யார் என்னன்ன பேச வேண்டும், எப்படியெல்லாம் நடிக்க வேண்டும், எந்த நேரத்தில் கோபப்பட வேண்டும், எந்த நேரத்தில் அழ வேண்டும் என்பதை முன்கூட்டியே எழுதி கொடுத்து நடிப்பதே இவர்களின் வேலை.
மக்கள் ஓட்டு போட்டு ஒவ்வொருவரையாக வெளியேற்றி விட்டு இருப்பதாக தோன்றும். ஆனால் உண்மையில் மக்கள் யாரை வெளியேற்ற வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு தான் காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.

நிறைய சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும்.
இவையெல்லாம் மக்களை ஈர்க்கும் காந்த சூழ்ச்சி என்பதை அறிய நாம் மறக்கடிக்கபடுகிறோம். சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவதுபோல் வைத்து TRP ஏற்றுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் நடிகர் நடிகைகள் மட்டுமே பங்கேற்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் தான் ஸ்கிரிப்டில் உள்ளபடி நன்றாக நடிப்பார்கள். ஏன் சாதாரண பிரபலங்கள் எல்லாம் பிக் பாஸ் கண்ணுக்கு தெரியவில்லையா?
இளைஞர்களை கவர கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே நடிகைகள் பயன்படுத்துவார்கள். இதுபொன்ற ஆடைகளை அவர்களது வீட்டில் கூட அவர்கள் அணிந்திருக்க மாட்டார்கள்.
இதில் ஜல்லிக்கட்டில் பங்கு பெற்ற பெண் ஒருவர் பங்கு பெற்றுள்ளாரே என்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம். திரைப்படங்கள், சீரியல்களில் எத்தனை புதுமுகங்கள் வருகின்றன அல்லவா? அதுபோன்று தான் இதுவும்.

இந்த பிக் பாஸ் குடும்பத்திலேயே மக்கள் பார்த்து மிகவும் கொந்தளித்திருப்பது இந்த புதுமுகமான ஜல்லிக்கட்டு பிரபலம் ஜூலியைதான்.
காரணம் நடிக்கத்தெரியாமல் ஓவர் ஆக்டிங் விட்டதாக கூட இருக்கலாம். இறுதியில் பிக்பாஸ் குழு முடிவு செய்தபடியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்ததுபோல் பரிசு வழங்கி அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடுவார்கள்.
இவையெல்லாம் புரியாமல் மக்கள் பிக்பாஸ் குடும்பத்திற்கு நாம் ஓட்டு போடுகிறோம் என பீத்தி கொள்வது தான் மிச்சமாக உள்ளது.
