big boss house will be under the surveillance of public for 24 hours

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நேற்றிலிருந்து விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. 16 பிரபலங்களுடன் கமல் தொடங்கி வைத்திருக்கும் இந்த நிகழ்ச்சி தான் இன்னும் 100 நாட்களுக்கு சின்னத்திரையில் ஹாட் டாப்பிக்.

வழக்கமாக இந்த நிகழ்ச்சியில், முதல் நாள் நடை பெறும் நிகழ்வுகளை தொகுத்து அன்று இரவு ஒளிபரப்புவார்கள். மறு ஒளிபரப்பு அடுத்த நாள் பகலில் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அதே போல விஜய் ஸ்டார் சேனலிலும் ஒளிபரப்பாகும்.

இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியின் ஹாட் ஸ்டார் அப்ளிகேசனிலும் பார்க்கலாம். ஆனால் இம்முறை இந்த ஒளிபரப்பு முறையில் ஒரு புதுமையை புகுத்தி இருக்கின்றனர். அதாவது ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்பி வருகின்றது விஜய் தொலைக்காட்சி.

இதனால் பிக் பாஸ் வீடு 24 மணி நேரமும் மக்கள் கண்காணிப்பின் கீழ் இருக்கப் போகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் இதனால் 24 மணி நேரமும் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் பயணிக்கலாம்.