big boss home maids corner raiza

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றய ப்ரோமோவில், மிகவும் சோகமாக ரைசா தனியாக படுத்துக்கொண்டு ஒருத்தருடைய பலவீனத்தை பயன்படுத்தி அவரை பயமுறுத்த நினைப்பது டாஸ்க் இல்லை என பேசுகிறார்.

ஆனால் இத்தனைநாள் ரைசாவிற்கு ஆதரவாக பேசி வந்த சினேகன் இப்போது கட்சி மாறி காயத்ரியிடம் ரைசா இந்த டாஸ்கில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுவதாகவும், தான் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதில் விளையாடுங்கள் என கூறியதாகவும் கூறுகிறார்.

இவர்களுடைய பேச்சு ஒரு பக்கம் போய் கொண்டிருக்க, ஆரவ் மற்றும் வையாபுரி இருவரும் பெண்களை நம்பவே முடியவில்லை நம்மை பைத்தியமாக்கி விடுவார்கள் என பேசுவது போல் ஒரு ப்ரோமோவை வெளியிட்டு உள்ளனர் பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.