பிக் பாஸ் நிகழ்ச்சியில், எவ்வித பொழுது போக்கு அம்சங்களும் இல்லாததால் போட்டியாளர்களை உற்சாக படுத்தும் விதத்தில் பல சம்பவங்கள் நடக்கிறது.

அதில் ஒன்று தான் நேற்று விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்த தமிழ் தலைவாஸ் கபடி குழு. இங்கு விருந்தினர்களாக வந்த குழுவினருடன்... பிக் பாஸ் போட்டியாளர்களாக, சக்தி, வையாபுரி, ஆரவ், சினேகன், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் கபடி விளையாடினர்.

எப்படியோ கணிசமான பாயிண்ட்ஸ்களை  பெற்று மோசமாக விளையாடவில்லை என்று பெயர்பெற்றனர். இவர்கள் அனைவரையும் உருச்சாகமூட்டும் வகையில் ஓவியா, நமிதா, ஜூலி, ரைசா, ஆகியோர்  நடனமாடினர்.

இவர்களுடன் கபடி விளையாடியது பற்றி சினேகன் கூறியபோது கிட்ட தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்த விளையாட்டை விளையாடியதன் மூலம் தங்களுடைய இளமை பருவத்தை நினைவிற்கொள்வதாக கூறினார்.