big boss give chocolate powder for gayathiri
பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறை படி அனைவருக்கும் கொடுக்கப்படும் உணவுகளை கொண்டுதான் அவர்கள் அங்கு தங்கி இருக்கும் நாட்களை கழிக்க வேண்டும்.
ஆனால் நடன இயக்குனர் காயத்திரி ரகுராம், அனைவரும் தினமும் காபி, டீ, போன்றவை குடிக்கின்றனர். ஆனால் தனக்கு நான் சாப்பிடும் சாக்லேட் மில்க் இல்லை என குழந்தையை போல் பிக் பாஸ் அறைக்கு சென்று தன்னுடைய கோரிக்கையை கூறுகிறார்.
மேலும் தன்னால் வெறும் பாலை குடிக்க முடியாது அப்படி குடித்தால் வாந்தி வரும் என்றும், நான் பால் கிடைக்காததால் இப்போது தன்னுடைய உடலில் கால்சியம் சத்து சுத்தமாக இல்லை என்றும் தனக்கு சாக்லேட் பவுடர் வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு பிக் பாஸ் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி உங்களுக்கு தேவையானதை வழங்கும் என கூறி, காயத்திரி மருத்துவரை அணுக ஏற்பாடு செய்தது. பின் சில டெஸ்டுகள் எடுத்து அவருக்கு கால்சியம் குறைவாக இருந்தது தெரிந்ததும் அவருக்கு சாக்லேட் பவுடர் வழங்கியது.
