big boss ganeshvengat wife left the seriyal
வெள்ளித்திரையை தாண்டி சின்னதிரை நட்சத்திரங்களுக்கும் தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் மிகவும் பிரபலமானது.
இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் அமித் பார்கவ் நடித்து வருகிறார். கதாநாயகியாக சரண்யாவும் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நிஷாவும் நடித்து வருகின்றனர். 
தற்போது இந்த சீரியலில் இருந்து நிஷா விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நிஷா. அதில் இந்த சீரியலில் ஆரம்பத்தில் தன்னுடைய கதாப்பாத்திரம் நல்ல விதமாக இருந்ததாகவும் ஆனால் போக போக நெகட்டீவ் வேடமாக அதனை இயக்குனர் வடிவமைத்து வருகிறார். 
இது அந்த சீரியலுக்கு தேவையானது தான். ஆனால் எனக்கு இப்படி நடிப்பது சரிப்பட்டு வராது என்னால் இதுபோல் நடிக்க முடியாது என்பதால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
