பிக் பாஸ் நிகழ்ச்சியில்  முன்பெல்லாம்  காயத்ரி இன்று யாரை சண்டைக்கு இழுப்பர், யார் இவரால் அழப்போகிறார் என்கிற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அவரும் வெளியேறிவிட்டதால்   முன்பு பிக்  பாஸ் நிகழ்ச்சிக்கு இருந்த வரவேற்பு தற்போது குறைந்துள்ளது

போட்டியாளர்கள் யாரும் சண்டை போட்டுக்கொள்ளாததால், இவர்களை சண்டை போட வைத்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் போட்டியாளர்கள் மல்யுத்தம் செய்யும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்கை எதிர்கொள்கின்றனர், இந்த போட்டியின் நடுவராக வையாபுரி செயல்படுகிறார். மேலும் போட்டியின் போது ஆரவிற்கு அடி படுகிறது. ஆரவ் பொய் சொல்லுவதாக கூறி காஜல் வெறுப்பேற்றுகிறார். உடனே ஆரவ் மிகவும் கோபமாக சும்மா இருங்க ஏற்கனவே செம காண்டுல இருப்பதாக திட்டிடுகிறார். இதற்கு காஜல் சண்டை போடுவாரா இல்லையா என்று இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.