நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் அனைவரும் ஆண்களுக்கு வேலை ஆட்களாக இருக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

இந்த டாஸ்கை கேட்டதுமே, ஆண் போட்டியாளர்கள் செம குஷி ஆகிவிட்டனர். காரணம் இந்த டாஸ்க் முடியும் வரை, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, துணிகள் துவைப்பது மற்றும் ஆண்கள் எந்த வேலை கொடுத்தாலும் அதனை பெண் போட்டியாளர்கள் செய்ய வேண்டும். இந்த டாஸ்கிற்காக மொத்தம் 1600 பாயிட்ஸ் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த டாஸ்கை கேட்டதும் மமதி, நான் இந்த டாஸ்க்கிற்காக எந்த ஆண் நபரையும் தொட மாட்டேன் என தூய தமிழில் கூறி, இது தமிழர் பண்பாடு நான் ஒரு தமிழ் பெண் என கூறுகிறார். 

இவரின் இந்த வார்த்தை தான் ரசிகர்கள் பலரை விமர்சிக்க வைத்துள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சிலர், தான் தமிழ் பெண் என்று வசனம் பேசும் மமதி, ஏன் இங்கிலீஷ் காரங்கள் போல் உடை அணிகிறார் அதையும் தமிழ் கலாசாரத்தோடு அணிய வேண்டியது தானே என கூறி விமர்சித்து வருகிறார்கள்.