பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக களம் இறங்கிய ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் ஒன்றாக இணைந்து "பியார், பிரேமா, காதல்" என்ற படத்தில் நடித்தனர். லீவ் இன் லைப் ஸ்டைல் குறித்து எடுக்கப்பட்ட அந்த படம் இளம் தலைமுறையினர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இருவருக்குமிடையே அந்த படத்தில் இருந்த கெமிஸ்ட்ரி பற்றி எரிந்த நிலையில், படம் சூப்பர் ஹிட்டடித்திருந்தது. நீண்ட நாட்களாக வேறு படங்களில் நடிக்காமல் இருந்த ரைசா, தற்போது ஆலிஸ், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவ்வாக இருக்கும் ரைசா, அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே ஹரிஷ் கல்யாணுக்கும், ரைசாவிற்கும் இடையே ஏதோ இருப்பதாக கிசுகிசுக்கள் உலவி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஹரிஷ் கல்யாண் கூட டேட்டிங் போகலாம்னு இருக்கேன்னு சொல்லி ட்விட்டரில் ஒரு கருத்து கணிப்பையே நடத்தினார். 

தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ரைசா, சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்படி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒளிவு மறைவு இல்லாமல் ரைசா கொடுத்த சூப்பர் பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடிய ரைசாவிடம், ரசிகர் ஒருவர், “ஹரிஸ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” என்று கேட்க, அதற்கு ரைசா  “ஆமாம், ஆனால் அதை அவர்கிட்ட சொல்லாதீங்க, சர்ப்ரைஸ்” என்று பதிலளித்துள்ளார். ஏற்கனவே ரைசாவிற்கு ஹரிஸுக்கும் அப்படி, இப்படின்னு தீயாய் வதந்தி பரவி வரும் சமயத்தில் எரியிற கொல்லியில் எண்ணெய் ஊற்றியது போல் இப்படி ஒரு பதில் அளித்திருக்கிறார் ரைசா.