பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானெல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இதையும் படிங்க: பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

அப்படியும் பட வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை, இந்நிலையில் மீரா மிதுன் மணப்பெண் கெட்டப்பில் இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானது. இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்கப்போவது உண்மை தான் என மனம் திறந்துள்ளார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சூழ நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும், வரும் காதலர் தினத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தான் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற தகவலை மட்டும் திருமண நாள் வரை வெளியிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். 

இதையும் படிங்க: இஸ்லாத்திற்கு மாறியது ஏன்?... மனைவியை ரவுண்ட் கட்டிய நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்த யுவன்...!

மேலும் லாக்டவுனில் கிடைத்த பிரேக் என் வாழ்வை சிறப்பானதாக மாற்றிவிட்டது. இந்த லாக்டவுனில் தான் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் கிடைத்தது என்று தெரிவித்துள்ளார். மாடலிங் துறைக்காக தனது சொந்த பெயரான தமிழ் செல்வியை மீரா மிதுன் என மாற்றிக்கொண்டார். இவர் ஏற்கனவே திருமணம் என்றும்,  ஆனால் அந்த உறவு ஓரே நாளில் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.