பிக்பாஸ் பிரபலம்  மீரா மிதுன் மீது  எழும்பூர் போலீசார்  2 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த 2 ஆம் தேதி நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமக்கு இதுவரையில் ஊதியம் வழங்கப்படவில்லை. இதுவரையில் தனது ஊதியம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. தன்னை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கிக்கொண்ட விஜய் தொலைக்காட்சி எனக்கு ஊதியம் தராமல் ஏமாற்றி வருகிறது.  தனக்கான ஊதியத்தை செட்டில் செய்யவில்லையென்றால் விளைவு கடுமையாக இருக்கும் என்று மீரா எச்சரித்திருந்தார். 

மீராவால் என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியத்தில் விஜய் தொலைக்காட்சி இப்படி நடந்துகொள்கிறது என்ற அவர்,  அதற்குக் காரணம் தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு சரியில்லை போலீசும் சரியில்லை என்றார்.  தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை  என்பதால்தான் மும்பையில் செட்டிலாகி இருக்கிறேன் என்றவர்,  தமிழக அரசையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தார்.  அப்போது தமிழக  போலீசாருக்கு பத்தாயிரம் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் அவர்கள் வழக்கு பதிவு செய்வார்கள்.  என போலீசை தாறுமாறாக விமர்சித்தார். இதனையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து முடிந்தபோது,  இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை இங்குப் பேச வேண்டாம் என்று  ஹோட்டல் நிர்வாகத்தினர் மீரா மிதுனுடன், கேட்டதாக தெரிகிறது.  

அதற்கு, " நான் அப்படித்தான் பேசுவேன்" என  மீராமிதுன் அவர்களோடு வாக்குவாதம் செய்துள்ளார்.  அதனையடுத்து  ஹோட்டல் பணியாளர் அருண் என்பவர் மீரா மீதுன்  ஓட்டல் நிர்வாகத்தினரை  மிரட்டியதாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  அவர் அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது 2  பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.