இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ, அதேபோல் லாஸ்லியாவிற்கும் ஆர்மிகள் தூள் பறந்தது. அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது. பிக்பாஸ் வீட்டில் காலையில் எழுந்தவுடன் ஓவியா போல நடனமாடி அசத்தினார். அதேபோல் யார் பிரச்னைக்கும் செல்லாமல் எதிலும் சிக்காமல் சேஃப் கேம் ஆடி ‘நல்ல பிள்ளை’ என்ற பெயர் பெற்றார். 

இதையும் படிங்க: டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...!

இடையே கவின் - லாஸ்லியா காதல் விவகாரம் வேறு விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி.க்கு பக்க பலமாக இருந்தது. உலக நாயகன் கமல் ஹாசன் வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.இப்போது கவின், லாஸ்லியா காதலிக்கிறார்களா? என்பதே அவர்களது ரசிகர்கள் பட்டாளத்திற்கு மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.

இதையும் படிங்க: கொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது?... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...!

இதனிடையே லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண வேண்டுமென தமிழ் ரசிகர்கள் தவம் கிடந்தனர். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக லாஸ்லியா முதன் முதலில் “பிரெண்ட்ஷிப்” என்ற படத்தில் கமிட்டானார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சென்னையில் ஒருநாள், அக்னி தேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சுந்தர் இயக்கத்தில் “பிரெண்ட்ஷிப்” படம் தயாராகிறது. மேலும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

இந்நிலையில் “பிரெண்ட்ஷிப்” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை லாஸ்லியா ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். லாஸ்லியாவை ஹீரோயினாக பார்க்க வேண்டும் என ரசிகர்கள் மரண வெயிட்டிங். கொரோனா பிரச்சனையால் லாஸ்லியாவை வெள்ளித்திரையில் நாயகியாக பார்ப்பது தாமதமானது. தற்போது நாளை ரிலீஸ் ஆக உள்ள போஸ்டரிலாவது லாஸ்லியாவின் ஹீரோயின் தரிசனம் கிடைக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.