பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. அதைவிட கவின், லாஸ்லியா காதல் விவகாரம் பட்டித் தொட்டி எல்லாம் வைரலான சமாச்சாரம். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா, அம்மா காதல் விவகாரத்தை வெளிப்படையாகவே எதிர்த்தனர். ஆனால் அப்போது கூட காதலில் ஸ்ட்ராங்காக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு முற்றிலும் மாறிவிட்டார் என கவின் ஆர்மி புலம்பி வருகிறது. பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கூட சரியாக இருவரும் பேசிக்கொள்ளாததால், லவ் பிரேக் அப் ஆகிடுச்சின்னு எல்லாரும் நினைச்சிட்டு இருங்காங்க. 

இந்த சமயத்தில் சோசியல் மீடியாவில் தனது கலர் ஃபுல் போட்டோக்களை பதிவிட்டு வரும் லாஸ்லியா, கவின் ரசிகர்கள் ஏதாவது கேள்வி கேட்டாமல் மட்டும் கோமா நோயாளி போல மெளனமாகிவிடுகிறார். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள இடத்தில் லாஸ்லியா தனது நண்பர்களுடன் நின்று போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தி பதிவிட்டது தான் தாமதம், கவின் ஆர்மி கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டது. 

குறிப்பாக ஆண் நண்பருடன் இணைந்து லாஸ்லியா எடுத்துள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதனை பார்த்த கவின் ஆர்மி, கவினை நினைத்துப் பாருங்க, அவர் மனதை காயப்படுத்தாதீங்க என அட்வைஸ் செய்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் வழக்கம் போல லாஸ்லியா அழகை பார்த்து ரசித்து விட்டு லைக்குகளை தட்டிச் செல்கின்றனர்.