big boss contestent list officially announce
அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் 100 நாட்கள் டஃப் போட்டி கொடுக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியில் நாம் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பார்த்து ரசித்த பிரபலங்கள் கலந்துக்கொண்டு விளையாடுவதால், திரைக்கு பின்னால் உள்ள மறு முகத்தை பற்றி ரசிகர்கள் தெரிந்துக்கொள்வார்கள். மேலும் இதன் மூலம் பல்வேறு சர்ச்சைகளும் எழும்.

கடந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒரே நேரத்தில் இரண்டு மொழியிலும் துவங்க உள்ளது.
கடந்த வருடம் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கில் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை தற்போது தெலுங்கில் நடிகர் நானி தொகுத்து வழங்க உள்ளார். முதன் முதலாக நானி தொகுப்பாளராக அவதாரம் எடுப்பதால் மக்களிடயே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் வரும் ஜூன் 10 ம் தேதி ஆரம்பமாகவுள்ளது என நானி அறிவித்துள்ளார். 16 போட்டியாளர்கள் கொண்ட இந்த போட்டியில் கலந்துக்கொள்ள உள்ள பிரபலங்களின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
அவர்களின் விவரம் இதோ...
நடிகர் ராஜ் தருண்
பாடகி கீதா மாதுரி
தொகுப்பாளர் சியாமளா
தொகுப்பாளர் லஷ்யா
நடிகை ராஷி
நடிகை சார்மி கவுர்
தன்யா பாலகிருஷ்ணா
ஜூனியர் ஸ்ரீதேவி
நடிகை கஜாலா
சாந்தினி சௌத்ரி
ஸ்ரீ ரெட்டி
வருண் சந்தேஷ்
தனீஷ்
விவா ஹர்ஷா
நகைச்சுவை நடிகர் வேணு
நடிகர் ஆர்யன் ராஜேஷ்
என போட்டியாளர்கள் அனைவரது பெயர் பட்டியலும் வெளியாகியுள்ளது. எனினும் தெலுங்கு வரை பிரபலமான ஓவியாவைப் போல், எந்த நடிகை ரசிகர்கள் மனதில் அதிக இடம் பிடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
