big boss contestant not stop smile what happen

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருநாளும் ஏற்படும் வித்தியாசமான, பிரச்சனைகளை பார்க்கவே ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டும், யாரை எப்படி பழிவாங்குவது என திரிந்துக்கொண்டிருக்கும் பலர் இந்த டீமில் இருப்பதால், அனைவரும் சேர்த்து பழகும் சூழலும், சிரிக்கும் சூழ்நிலையும் இல்லாமலே இருக்கிறது.

இந்நிலையில் நேற்று திடீர் என பிக் பாஸ் குரல் இங்கு இருப்பவர்கள் அனைவரும் நன்றாக சிரிக்க வேண்டும் "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்கிற பழமொழியையும் கூறி சிரிக்கும் படி சொன்னது.

இந்த டாஸ்கை ஏற்றுக்கொண்ட போட்டியாளர்கள், லூசு போல் விழுந்து விழுந்து சிரித்தனர். பல நாட்கள் ஒருவருக்கொருவர் பார்த்து சிரிக்காமல் இருந்தவர்கள் இந்த டாஸ்க் மூலம் விழுந்து விழுந்து லூசு போல சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.