big boss contestant insults transgenders

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல புதிய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த முறை பல புதிய மாற்றங்கள் கண்டிருக்கும் பிக் பாஸ் வீட்டினுள், தங்களுக்கான கனவுகளுடன் நுழைந்திருக்கும் 16 பிரபலங்களையும், கமலஹாசன் அறிமுகம் செய்து, வாழ்த்தி, பிக் பாஸ் வீட்டினுள் அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல வில்லன் நடிகரும், சண்டை கலைஞருமான பொன்னம்பலமும் கலந்து கொண்டிருக்கிறார். சண்டை கலைஞர்கள் பற்றி உருக்கமாக பேசிய அவர், ஒரு குடும்ப தலைவன் இல்லாமல் அந்த குடும்பம் எப்படி தவிக்கும் என்பதை உணர்த்தவே, தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிகழ்ச்சியின் போது முன்னதாக நுழைந்த இவரும் பிற போட்டியாளர்களும், அடுத்த போட்டியாளர் ஆணா? பெண்ணா? என கேள்வி எழுப்பினர். அப்போது இரண்டும் கெட்டானாக இருந்தா என்ன பண்றது? என கேள்வி எழுப்பி இருக்கிறார் பொன்னம்பலம்.

இந்த வார்த்தை மூன்றாம் பாலினத்தாரை அவமானப்படுத்துவது போல இருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் அவர் கூறிய இந்த வார்த்தையை, வன்மையாக கண்டித்திருக்கின்றனர் பொது மக்கள்.