big boss arav start the NGO
ஆரவ் என்றதுமே பலரது நினைவிற்கும் முதலில் வருவது ஓவியாவாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு ஆரவை உருகி உருகிக் காதலித்தவர் நடிகை ஓவியா. எப்படியும் இவர்களுடைய காதல் வெல்ல வேண்டும் என நினைத்தவர்கள் பலர்.
ஆனால் ஆரவ் ஓவியாவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்த ஓவியா... தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு தன்னுடைய காதல் கனவை கலைத்துக்கொண்டார். இருப்பினும் இன்று வரை இவர்களது காதல் விஷயம் சற்று புகைச்சலில் தான் உள்ளது.

ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓவியா மூலமாக மருத்துவ முத்தம் போன்ற ஒரு சில சர்ச்சைகளை சந்தித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.
தற்போது ஆரவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று கிடைத்த பணத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து திருநெல்வேலியில் ஒரு NGO ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய இவர், விவசாயம், மீனவ மக்கள் என பலர் தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் பதிக்கப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த NGO வை ஆரம்பித்துள்ளோம். இதில் என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனை துவங்கியதன் மூலம் நாங்களே நேரடியாக மக்களுக்கு உதவ முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த NGO ஜாதி மத பேதம் கடந்து மக்களுக்கு உதவுவதற்காகவே தொடங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.
