பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெறுப்பை சம்பாதித்தவர் யார் என்று கேட்டால் ஜூலி என்றுதான் ஆரம்பத்தில் சொல்லி வந்தனர்.  ஆனால் தற்போது அந்த ஜூலியை எல்லாம் அடித்து துவம்சம் செய்து,  தான்தான் அதில் உச்சம்  என நெஞ்சை நிமிர்த்தி முதலிடத்தில் நிற்கிறார் பிக்பாஸ் புகழ் மீராமிதுன்.   விதவிதமான சேட்டைகள் மூலம்  தனக்கு  ஒரு நெகடிவ் இமேஜை தக்கவைத்து வருகிறார் மீரா என்றால் மிகையல்ல.  ஆனால் , அதே நேரத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என அவர் அடிக்கடி கொடுக்கும் பில்டப்கள்தான் கொஞ்சம் ஒவராக உள்ளது . இல்லை இல்லை ரொம்பவே ஒவராக உள்ளது என்கின்றனர் பலர்.  
 
தன் ரசிகர்களுக்கு  என அவர்,  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக படு மோசமான  ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆனால்  தனக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று சொல்லும்  மீராவின் வீடியோக்களை  சமூகவலைதளத்தில் ஆதரித்து கருத்துச் சொல்லாம் மாறாக மீராவை  திட்டி தீர்க்கும்ரக ரசிகர்கள்தான் அதிகம்  உள்ளனர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது . மிகுந்த விளம்பரப் பிரியர் எனவும்,  புகழ்ச்சிக்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன் என்பது போலவும் அவரின் நடவடிக்கைகள் இருந்து வருகிறது .

 

 இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மாலைப்பொழுதில் கருப்பு நிற உடை அணிந்து படுகவர்ச்சியான வகையில்  புகைப்படம் ஒன்றை மீரா வெளியிட்டுள்ளார்,  அதைக் கண்டு ரசிகர்கள் மீராவை வழக்கம்போல   எக்கச்சக்கத்திற்கும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  அதில் பதிவிட்டுள்ள அஜித் ரசிகர் ஒருவர் " முதலில் போட வேண்டியத போடுங்க,   கண்ணு கூசுது " என்று கமெண்ட் செய்துள்ளார் .  இதுபோன்று நெகடிவாக எத்தனை கமெண்ட்கள் வந்தாலும் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அனைத்தையும் பாசிட்டிவாக எடுக்க கொள்ளும் மீராவின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது தான்.