அந்த விஷயம் குறித்து  எனக்கு ஏற்கனவே  தெரியும் ஆனால் நான் சும்மா மேடையில் நடிச்சேன் என ராஜ்கமல் மூவியில் ஒப்பந்தமானது குறித்து தர்ஷன் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்களிலேயே ஆஜானுபாகுவாக,  கட்டுமஸ்து உடலில் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவரும் , அதிக பெண் ரசிகர்களை கொண்ட  போட்டியாளர் என்றால், அது தர்ஷன் என்பது எல்லோருக்கும் தெரியும். 

 மாடல் உலகில் மிகுந்த அனுபவம் கொண்ட தர்ஷன்,  கடும் போராட்டத்திற்குப் பின்னர் ,  அவருக்கு திரையுலக வாய்ப்பு கிடைத்துள்ளது.  பிக்பாஸ் போட்டியால் தான் அதுவும் சாத்தியமானது என்பது அனைவருக்கும் தெரியும்.  அதேபோல் பிக்பாஸ் வெற்றியாளர் தர்ஷன்தான் பிக்பாஸ் வெற்றியாளர் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  இன்னும் கூட ரசிகர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அவர் பிக்பாஸ் போட்டியில் வெற்றிபெறவில்லை என்றாலும்,   நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் சந்தோஷம் என ஜாலியாகவே  இருந்துவருகிறார்.  முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தரிஷனை ஒப்பந்தம் செய்வதாக கமல் மேடையிலேயே அறிவித்தார். 

அப்போது தர்ஷன் மற்றும் அவரது தாயார்,  மகிழ்ச்சியில் கண்கலங்கி அழுதனர்.  அப்போது பேசிய தர்ஷன் நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என கண்கலங்கி அழுதுவிட்டார் . இந்நிலையில் அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த அவர்,  ராஜ்கமல் பட வாய்ப்பு கிடைத்த தகவல் எனக்கு முன்கூட்டியே தெரியும்  ஆனால் மேடையில் சர்ப்ரைஸாக இருந்தது போல நான்தான் நடித்தேன் என வாய் தவறி கூறி விட்டார்.  பின்னர் அதை சமாளிப்பது போல சமாளித்து பேசினார்.  இதை கண்ட அவரது ரசிகர்கள் அடே... தர்ஷா... இப்படி உளறி கொட்டிவிட்டாயே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.