அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் அபிராமி. இவர் விஜய் டி.வி.யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் கவின் மீது க்ரஷ் உடன் சுற்றிய அபிராமி, அதனை அவரிடமே தெரிவித்தார். ஆனால் தனக்கு அபிராமி மீது காதல் இல்லை என்பதை கவின் கூற, முகென்னை காதலிக்கத் தொடங்கினார் அபிராமி. முகெனுக்கு ஏற்கனவே காதலி இருப்பது தெரிந்திருந்தும், அவரை ஒருதலை பட்சமாக உருகி, உருகி காதலித்தார். அபிராமி எனக்கு வெறும் தோழி மட்டும் தான் என முகென் கூற தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த அபிராமி, ஹாட் போட்டோ ஹுட்களை நடத்தி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதற்கும் நெகட்டிவ், பாசிட்டிவ் கமெண்ஸ்ட்கள் கிடைத்தன. அதன் பின்னர் தனக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தனது ரசிகர்களுக்கு அறிவித்தார்.எஸ்.மதன் என்பவர் இயக்கும் மலேசிய நாட்டு படத்தில் நடித்து வருகிறார். அதற்கு கஜன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். ரசிகர்கள் அபிராமியை வாழ்த்து மழையில் நனையவைத்தனர். 

பிக்பாஸ் அபிராமி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் நீ என்ன நினைச்சாலும் கவலையில்ல, நான் பிறந்த மண்ணையும், ஆண்டவன் வாழும் விண்ணையும் மட்டுமே நம்பி வாழும் நான் என்று பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் அபிராமி யாருக்கு மறைமுகமாக இந்த தகவலை சொல்ல வர்றாங்கன்னு தெரியலைன்னாலும், போட்டோ ரொம்ப அழகா இருக்குறதால லைக்குகளை குவிச்சிட்டு இருக்கு.