big boss 3 celebrities target for persons why?
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் பிரபலங்கள் தான் கலந்துக்கொண்டுள்ளனர். அவர்களில் பலருக்கு சமைக்க தெரியாது. அதனால் அவர்கள் சுத்தம் செய்யும் டீம், பாத்ரூம் கழுவும் டீம், பாத்திரம் சுத்தம் செய்யும் டீம்களில் மட்டுமே வேலை செய்து வருகின்றனர்.
இப்படி சமைக்காமல் நாக்குக்கு சுவையாக நாம் சமைத்து தரும் சாப்பாட்டை மட்டுமே, சாப்பிட்டுக்கொண்டு சிலர் இருக்கின்றனர். அவர்களை சமைக்க கூறி சமைக்க தெரியாதவர்கள் அனைவரையும் ஒரே டீமில் போட வேண்டும் என்று பிக் பாஸ் குடும்பத்தின் தலைவி காயத்திரி, முன்னாள் தலைவர் சினேகன் மற்றும் சக்தி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அதற்கு சக்தி ரைசா, ஓவியா, பரணி, நமீதா ஆகியோரை கோர்த்து விட வேண்டும் என கூற அதற்கு சினேகன் பரணி இந்த வாரம் எலிமினேட் ஆகி போய் விடுவான் என நினைப்பதாக கூறுகிறார். அதற்கு காயத்திரி ஜூலியை போடலாம் என்று கூறுகிறார்.
இதிலிருந்து அடுத்த வாரம் சமைக்கும் பொறுப்பு இவர்களுக்கு தான் சென்றடையும் என தெரிகிறது, இவர்கள் செய்யும் தவறால் இவர்களே சாப்பிட முடியாத நிலை வந்தாலும் வரலாம்.
