big boss 2 third promo released
கடந்த வருடம், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது தமிழில் இரண்டாவது சீசன் ஆரம்பமாக உள்ளது.
வரும் ஜூன் 17 ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்கிற தகவலை ஏற்கனவே நமது தளத்திலேயே கூறி இருந்தோம்.
முதல் சீசனை விட, இரண்டாம் சீசன் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாரும் முந்தைய ஆட்களை போல பாவனை செய்யமுடியாது என்பதில் போட்டியாளர்களுக்கும் தெரிந்திருக்கும்.
யாரெல்லாம் இதில் கலந்துகொள்ள போகிறார்கள் என்பதில் ஆர்வம் நிறைந்துள்ளது. ஏற்கனவே டீசர், புரமோ என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியது.
இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் என்ன பேசி இருக்கிறார் கமல் என்பதை நீங்களே பாருங்கள்.
