பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த வாரம் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சி இது வரை எந்த பிரச்னையும் இன்றி சென்றுக்கொண்டிருக்கிறது என்று பார்த்தல், தற்போது வெடித்துள்ளது மிகப்பெரிய பிரச்சனை.

ஆனால் இந்த பிரச்சனை பிக்பாஸ் வீட்டின் உள்ளே, இல்ல பாஸ் வீட்டிற்கு வெளியே.  வரும் ஜூன் 25ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,  கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மொத்தம் 400 பேர் வேலைசெய்து வரும்நிலையில், பெப்சி தொழிலாளர்கள் 41 பேர் மட்டுமே   சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால்,  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை ஏற்படும் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்ததாக இந்த பிரச்சனை சரி செய்யும் நோக்கத்தில்   நிகழ்ச்சியாளர்கள்  ஈடுபடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான, பிக்பாஸ் முதல் சீனன் போது... வீட்டிற்கும் பல பிரச்சனைகள் வெடித்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இப்படிப்பட்ட பிரச்சனை வெடித்துள்ளதால் பிக்பாஸ் ரசிகர்கள் சற்று கவலையில் உள்ளனர்.