பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. என்பது இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை பற்றி கூறி, தங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. 

இதில் முதல் ஆளாக பேசும், டானியல் 'அவருடைய அப்பாவை பற்றி எதோ சொல்லி அழுகிறார்' அவரை மற்ற போட்டியாளர்கள் சமாதானம் செய்கிறார்கள். 

அடுத்ததாக ரித்விக்கா அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை பற்றி பகிர்ந்து கொண்டார். பின் நடிகர் பாலாஜி 'தான் அதிகம் அன்பு வைத்திருப்பது தன் மகள் போஷிகா மீது தான் என கூறுகிறார். இவரை தொடர்ந்து பாலாஜியின் மனைவி நித்யா பேசும்போது 'தான் தப்பானவள் என எல்லோரும் பேசிய போது என் பெற்றோர் மட்டும் தான், என் மகள் தவறு செய்திருக்க மாட்டாள் என நம்பியதாக, கூறி அழுகிறார். 

இதன் மூலம் இதனை நாள் போட்டியாளர்கள் சண்டையை மட்டுமே ஹை லைட் செய்த நிகழ்ச்சி, இன்று அவர்களின் கண்ணீர் பக்கங்களையும் காட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.