தமிழில் மட்டுமல்ல ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் சைலண்டாக உட்கார வைப்பது பேய் படங்கள் மட்டுமே. அந்த வகையில் விக்கி சோசல், பூமி பட்னேகர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள  பேய் படத்தின் டிரெய்லர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

ரசிகர்களின் பல நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு பூட் - பர்ஸ்ட் பார்ட் தி ஹாண்டட் ஷிப் என பெயரிடப்பட்டுள்ள படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. புயலால் மும்பை பக்கம் கரை ஒதுங்கும் சீ பேர்ட் என்ற வெறிச்சோடிய கப்பலுடன் படத்தின் டிரெய்லர் தொடங்குகிறது.

கப்பல் சமந்தப்பட்ட அதிகாரியான விக்கி கோஷல் தனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சீ பேர்ட் கப்பலைப் பற்றி தெரிந்து கொள்ள முயல்கிறார். கப்பலுக்குள் செல்லும் அவருக்கு என்ன மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும் என்று செம்ம திரில்லிங்காக கூறியுள்ளனர். 

அதிலும் கப்பலுக்குள் செல்லும் காதல் ஜோடியின் சீன் நம்மை அதிரவைக்கிறது. டிரெய்லரை பார்த்து மிரண்டு போயுள்ள ரசிகர்கள், ஹாலிவுட் தரத்திற்கு உருவாகியுள்ள இந்த படம் கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என ஆருடம் சொல்லி வருகின்றனர்.