bhavana open talk her marriage

தமிழில் 'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தில் அறிமுகமாகி, மாதவன், அஜித், ஜெயம் ரவி, என பலருடன் நடித்தவர் நடிகை பாவனா .

கடந்த சில மாதத்திற்கு முன், இவருக்கும் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருக்கும் எளிமையானா முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் தன்னுடைய திருமணம் எப்படி நடக்கும் என மனம் திறந்துள்ளார் பாவனா, அவர் கூறுகையில்...

பெரும்பாலும் சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்களின் திருமணம் என்றால் மிகவும் பிரமாண்டமாகத்தான் நடக்கும் என நினைப்பார்கள்.

அந்த நினைப்பை மாற்றுவது போல் என்னுடைய திருமணம் இருக்கும் என்று அதிரடியாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய திருமணம் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல், மிகவும் எளிமையாக நடைபெறும் என்றும் அதே போல தன்னுடைய ஆடை மற்றும் நகைகளில் கூட எந்த ஆடம்பரம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பிறகும் தான் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும், தன்னுடைய முடிவிற்கு கணவர் வீட்டிலும், பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.