கொரோனா லாக்டவுன் காரணமாக ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்”, கீர்த்தி சுரேஷின் “பெண் குயின்”, சூர்யாவின் “சூரரைப்போற்று”, விஜய்சேதுபதியின் “க/பெ ரணசிங்கம் ”,  நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்”, தற்போதைய பொங்கல் விருந்தாக ஜெயம் ரவியின் 25வது படமான ‘பூமி’ வரையிலும் ஓடிடி தளத்தில் வெளியானது. இன்னும் சிறிது காலத்திற்கு இதே நிலை நீடித்தால் தியேட்டர் என்ற ஒன்று இருந்ததையே மக்கள் மறந்துவிடுவார்களே என தியேட்டர் உரிமையாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். 

 

இதையும் படிங்க: சித்ராவின் ஹேண்ட் பேக்கில் கிடைத்த கஞ்சா... திசைமாறும் தற்கொலை வழக்கு... போலீசாரிடம் சிக்கிய பகீர் ஆதாரம்!

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் கடந்த 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு மக்கள் கூட்டம் வரவில்லை. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ‘மாஸ்டர்’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ஆகிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதையடுத்து தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென தியேட்டர் உரிமையாளர்களும், திரையுலகினரும்  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் இன்று தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் எங்கள் நன்றிகள். 

 

இதையும் படிங்க: ‘இனி அஜித், விஜய் எல்லாம் காலி’... சிம்பு களத்தில் இறங்கி கலக்கப்போறார்... புகழ்ந்து தள்ளிய சுசீந்திரன்...!

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் (SOP's) கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம். திரைப்படம் பார்க்க வரும் அனைவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.