இந்நிலையில் அந்த விஷயத்தை உண்மை என்று உறுதிபடுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், கடந்த 1972 ஆம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் - ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படம் 'சிவப்பு ரோஜாக்கள்'. ஆண்களை மயக்கி தன் ஆசை வளையில் சிக்க வைக்கும் பெண்களை தேடிப் பிடித்து கொலை செய்யும் சைக்கோவின் கதை.இந்த படம் தற்போது 42 வருடங்களுக்கு பிறகு தற்போது அந்த படம் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.

இதையும் படிங்க: காதல் கணவருடன் மகளின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய அசின்... ‘அரின்’ என்றால் அர்த்தம் இதுதானாம்...!

பாரதிராஜா இயக்கிய இந்த படம், 100 நாட்களை கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் கமல்ஹாசனால் இது போன்ற திரில்லர் படங்களிலும் நடிக்க முடியும் என இந்த படம் நிரூபித்தது. இந்நிலையில் இந்த படத்தை தற்போது ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார், பாரதிராஜாவின் மகன் மனோஜ் இந்த படம் மூலமாக நடிகர் மனோஜ் இயக்குநராக மாற உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அந்த விஷயத்தை உண்மை என்று உறுதிபடுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 

Scroll to load tweet…

இதையும் படிங்க: கல்யாண களைகட்டிய காஜல் அகர்வால் வீடு... வைரலாகும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் போட்டோஸ்...!

இந்நிலையில் இப்போது மனோஜ் படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் உறுதிப்படுத்தி உள்ளார். முழுமை தகவல் அவருடைய லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் இதை தயாரிக்க இருக்கிறது. அடுத்த வருடம் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்த படம் சிவப்பு ரோஜாக்கள் படத்தின் பார்ட் 2வாக இருக்கலாம் என கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள், டெக்னிஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.