Asianet News TamilAsianet News Tamil

“புது பட ரிலீஸுக்கு தடையில்லை”... போட்டாச்சு புது ஒப்பந்தம்... வெளியானது அதிரடி அறிவிப்பு...!

இந்த ஒப்பந்தத்தில் மூலம், 31/3/2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

Bharathiraja release  statement about News movie release
Author
Chennai, First Published Nov 18, 2020, 6:53 PM IST

விபிஎஃப் கட்டணம் காரணமாக  தயாரிப்பாளர்கள் - தியேட்டர் உரிமையாளர்களால் இடையே தீவிர மோதலால் இனி புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என அறிவித்தினர். இதனால் 7 மாதங்களாக பூட்டிக்கிடந்த திரையரங்களுகளை மீண்டும் திறந்த தியேட்டர் உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், நவம்பர் மாதத்திற்கான100% விபிஎப் கட்டணத்தையும் தானே ஏற்றுக் கொள்வதாக க்யூப் அறிவித்தது. இதை பாரதிராஜாவின் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் ஏற்றுக்கொண்டு, 2 வாரங்களுக்கும் மட்டும் புதிய படங்களை வெளியிட ஒப்புக்கொண்டது. 

Bharathiraja release  statement about News movie release

இடியாப்ப சிக்கல் போல் நீடித்து வந்த இந்த பிரச்சனைக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புது ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரதிராஜாவின் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், QUBE நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே VPF கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது, அந்த பேச்சு வார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் QUBE நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

Bharathiraja release  statement about News movie release

அதன் படி, QUBE நிறுவனம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31/3/2021 தேதிக்குள், இந்த VPF பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.தமிழ் திரைப்பட துறை பாதிப்பிலிருந்து மீண்டு இந்த வர கொரோனா வேண்டும் கால புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாராரும் இந்த சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

Bharathiraja release  statement about News movie release

31/3/2021 தேதிக்குள், மூன்று சாராரும் இணைந்து VPF கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்த பிரச்சனை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம். இந்த ஒப்பந்தத்தில் மூலம், 31/3/2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்.

Bharathiraja release  statement about News movie release

தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் அவர்களுக்கும் விளம்பரத்துறை மாண்புமிகு மாண்புமிகு அமைச்சர் துணை திரு முதலமைச்சர் செய்தி கடம்பூர் மற்றும் ராஜு அவர்களுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை எவ்வித சிக்கலும் இல்லாமல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios