நடிகை வாணி போஜன், பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நடிகர் பரத்துக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமோகமாக துவங்கியது. 

நடிகை வாணி போஜன், பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நடிகர் பரத்துக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமோகமாக துவங்கியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வாணி போஜன் சின்னத்திரையை தொடர்ந்து, ஒரு சில தமிழ் படங்களில் நடித்தாலும், இவருக்கு வெள்ளித்திரையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றால், கடந்த ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், மற்றும் வாணி போஜன், நடிப்பில் வேலையான 'ஓ மை கடவுளே' திரைப்படம் தான். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததுதான் அனைவரது நடிப்பும் பாராட்ட பட்டது.

இதை தொடர்ந்து வாணி போஜன், தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக 'பாயும் ஒளி நீ எனக்கு', சசிகுமாருக்கு ஜோடியாக 'பகைவனுக்கு அருள்வாய்' என பிஸியாக வலம் வருகிறார். அதே போல் நடிகர் பரத்துக்கு ஜோடியாக இன்னும் பெயரிடாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் பூஜையுடன் துவங்கிய நிலையில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைததால் படப்பிடிப்பு பணிகள் தாமதமாகியது. தற்போது கொரோனா அலை கட்டுக்குள் வந்து விட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசியில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அம்பை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்கம் இந்த திரில்லர் படத்தை, ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.