சட்டவிரோத பெட்டிங் ஆப் (பந்தய செயலிகளை) ஊக்குவித்த ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உட்பட 25 பிரபலங்கள் மீது FIR பதிவு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத பந்தய செயலிகளை ஊக்குவிப்பதாக, எழுந்த புகாரில் பாகுபலி நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால் உட்பட 25 பிரபலங்கள் பேர் மீது தெலங்கானா காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர். 32 வயதான தொழிலதிபர் ஃபனீந்திர சர்மா அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் இந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
FIR-இன் படி, நடிகர்கள் மற்றும் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர்கள் மீது, பாரத் நியாய் சன்ஹிதா பிரிவின் அடிப்படையில் 318(4), 112, r/w 49, TSGA ஆகிய நான்கு பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-D ஆகியவற்றின் கீழ் புகார் அளிக்கப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டம்: தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
ராணா டகுபதி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் ஜங்லீ ரம்மியை ஊக்குவித்ததற்காகவும், விஜய் தேவரகொண்டா A23 ஐ ஊக்குவித்ததற்காகவும், மஞ்சு லட்சுமி Yolo 247 க்காகவும், பிரணீதா Fairplay க்காகவும், நிதி அகர்வால் Jeet Win க்காகவும் போன்ற பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காக இவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 25 பேர் மீது FIR பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. டாப் நடிகர் நடிகைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் தற்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
