samantha-naga chaitanya wedding held on goa for tomorrow. now samantha chat with her fans via twitter page
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா-நடிகை சமந்தா திருமணம் நாளை கோவாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
சுமார் 10 கோடி செலவில் நடைபெறும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை சமந்தா தனது ரசிகர்களுடன் தற்போது டுவிட்டரில் #AskSam என்ற ஹேஷ்டேக்கில் உரையாடி வருகிறார்.
முதல் பார்வை

முதல் பார்வையிலேயே காதல் வருவது சரியா? தவறா? என்ற ரசிகரின் கேள்விக்கு அது சில நேரங்களில் உங்களுக்கே தெரியும் என சமந்தா பதிலளித்துள்ளார்.
பதட்டம்-உற்சாகம்

நாளை திருமணம் என்ற நிலையில் தற்போது உங்களின் மனநிலை எவ்வாறு உள்ளது? என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு சமந்தா பதட்டமாகவும் அதே நேரம் உற்சாகமாகவும் உள்ளது என தனது மனநிலையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிப்பு

திருமணத்திற்குப் நடிப்பீர்களா? உங்களின் பதிலை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம் என சமந்தாவை கேட்க, அதற்கு சமந்தா நான் ஒருபோதும் சினிமாவை விட்டு விலகமாட்டேன் என உறுதியுடன் பதில் கூறியிருக்கிறார்.
நாக சைதன்யா

உங்கள் வாழ்வின் விஷேசமான நபர் நாக சைதன்யாதான் என்பது உங்களுக்கு எப்போது தெரியும்? என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு முதல் பார்வையிலேயே தெரிந்தது என சமந்தா தெரிவித்திருக்கிறார்.
இந்த உரையாடலின் மூலம் ரசிகர்கள் பலரும் சமந்தா-நாக சைதன்யா திருமணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
