தெலுங்கு நடிகை, ஷ்ரவ்யா ரெட்டி பாத் டப்பில் படுத்துக்கொண்டு, பீரை தலை முதல் கால் வரை ஊற்றி,  வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே நடிகைகள், ரசிகர்கள் தங்களை மறந்து விட கூடாது, தங்களை பற்றி பேசிக்கொண்டும் கொண்டே இருக்க வேண்டும் என சர்ச்சையான விஷயங்களை கூட இஷ்டப்பட்டு செய்வார்கள்.

அந்த வகையில், தெலுங்கு கவர்ச்சி நடிகை ஷ்ரவ்யா ரெட்டி, பாத் டப்பில் படுத்து கொண்டு பாட்டில் பாட்டிலாக பீரை தலை முதல் கால் வரை ஊற்றி கொண்டு அதற்கு 'பீர் பாத் டப் சேலஞ்ச்' என்று பெயர் வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் பட வாய்ப்பு தேட இப்படி ஒரு விளம்பரமா என நடிகையை விமர்சித்து வருகிறார்கள்.