நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பீஸ்ட்' படம் உலகம் இன்று வெளியாகியுள்ளது.
பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கில் செண்டை மேள தாளம் முழங்க நடிகர் விஜய் படத்திற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
வெளியானது பீஸ்ட்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பீஸ்ட்' படம் உலகம் இன்று வெளியாகியுள்ளது.

விடிய விடிய கொண்டாட்டம்
தமிழகத்தின் பல இடங்களில், குறிப்பாக சென்னை போன்ற நகரப் பகுதிகளில் அதிகாலை ஷோ 4 மணிக்கு திரையிடப்பட்டது. இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை வரவேற்றனர். வழக்கம் போல், விஜய்யின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.

பாலாபிஷேகம்
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் SBT சினிமாஸ் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தை வரவேற்கு விதமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ரசிகர்கள் நடிகர் விஜய் திரைப்பட பாடல்களுக்கு இடைவிடாது தொடர்ந்து நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செண்டை மேள தாளம் முழங்க நடிகர் விஜய் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர். அதேபோல், ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கில் பீஸ்ட் படம் வெளியீட்டை தொடர்ந்து DJ நிகழ்ச்சியினை ரசிகர்கள் ஏற்பாடு செய்து கொண்ட்டத்தில் ஈடுபட்டனர்.