Asianet News TamilAsianet News Tamil

இன்று முதல் சென்னையில் துவங்குகிறது 'பீஸ்ட்' படப்பிடிப்பு..!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்'  படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது என்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில் இன்று முதல் சென்னையில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

beast movie shooting started today in chennai
Author
Chennai, First Published Jul 1, 2021, 12:39 PM IST

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்'  படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது என்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில் இன்று முதல் சென்னையில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: நான் அப்படி சொல்லவே இல்லையே... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கஸ்தூரி!
 

கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் முதல் முதலாக விஜய்யை வைத்து 'தளபதி 65 ' ஆவது படத்தை இயக்குகிறார்.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

beast movie shooting started today in chennai

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. சுமார் 15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சுமார் 30 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் படக்குழு சென்னை திரும்பியது. எனவே இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் துவங்க செட் அமைக்கப்பட்டு வந்த நிலையில் அந்த பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..! தீவிர சிகிச்சை..!
 

beast movie shooting started today in chennai

மேலும் கொரோனா அச்சுறுத்தல் குறைந்த பிறகே படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது, கொரோனா தொற்று தமிழகத்தில் மும்பை விட பெருமளவு குறைந்துள்ளதாலும், தமிழக அரசு படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுத்துள்ளதாலும். இன்று முதல் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். 'பீஸ்ட்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்க உள்ள காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios