பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ என்கிற பாடல் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனிருத் பாடி உள்ள இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். 

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். அப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் முடங்கிப்போனது. இதையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நெல்சன். அவர் நடித்த டாக்டர் படத்தை இயக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. மேலும் இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பியது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் நெல்சன் படத்தை இயக்கி உள்ளார் நெல்சன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ என்கிற பாடல் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனிருத் பாடி உள்ள இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்பாடலின் புரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் ஆகியோரின் கலாட்டா நிறைந்த இந்த புரோமோவின் இறுதியில் அரபிக் குத்து பாடலின் டியூனும் இடம்பெற்றிருந்தது. 

கேட்டவுடன் பிடிக்கும் விதமாக இருந்த டியூன், ஒரு கட்டத்தில் எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறதே எனவும் எண்ண வைத்தது. அதனைத் தேடிப்பிடித்த நெட்டிசன்கள் இதுவும் காப்பி தானா என அனிருத்தை கிண்டலடித்து வருகின்றனர். இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ‘தீவானா ஹுன் தீவானா’ என்கிற ஆல்பம் பாடலின் டியூனை தான் அனிருத் அப்படியே காப்பி அடித்து பீஸ்ட் பட பாடலுக்கு போட்டுள்ளதாக ட்ரோல் செய்து வருகின்றனர். 

YouTube video player

YouTube video player