பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று கேப்டன்சி டாஸ்க் நடைபெறும். இதில் வெல்லும் போட்டியாளர், அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்க முடியும். 

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி (Suresh chakravathy), சுஜா வருணி (suja varunee) ஆகியோர் எலிமினேட் ஆகி உள்ளனர். 

மீதமுள்ள 12 பேருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று கேப்டன்சி டாஸ்க் நடைபெறும். இதில் வெல்லும் போட்டியாளர், அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்க முடியும். அதுமட்டுமின்றி அவரை அந்த வாரம் முழுவதும் யாரும் எவிக்ட் செய்ய முடியாது.

அந்த வகையில் இந்த வாரத்துக்கான கேப்டன்சி டாஸ்கில் வனிதா (Vanitha) மற்றும் சுருதி (Suruthi) ஆகியோர் விளையாடுகின்றனர். கண்ணைக்கட்டிக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டில் வனிதா போங்காட்டம் ஆடியதை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்டுபிடித்து விடுகின்றனர். இதையடுத்து இருவரையும் மீண்டும் ஆட வைக்கலாம் என ஹவுஸ் மேட்ஸ் சொல்ல அதற்கு வனிதா, ஆட முடியாது என முரண்டு பிடிக்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

YouTube video player